ஆப்நகரம்

போலி செய்தி வெளிட்ட காங்., இதழ்- பாஜ விமர்சனம்

ராணுவ வீரரின் மனைவி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இவர் அபிநந்தனின் மனைவி என தவறான செய்து பரப்பப்பட்டது. விசாரித்ததில் இவர் அபிநந்தனின் மனைவி கிடையாது எனத் தெரியவந்துள்ளது. இது குறித்த போலி செய்தியை காங்., இதழ் வெளியிட, அதனை பாஜ., விமர்சித்துள்ளது.

Samayam Tamil 2 Mar 2019, 11:56 pm
ராணுவ வீரரின் மனைவி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இவர் அபிநந்தனின் மனைவி என தவறான செய்து பரப்பப்பட்டது. விசாரித்ததில் இவர் அபிநந்தனின் மனைவி கிடையாது எனத் தெரியவந்துள்ளது. இது குறித்த போலி செய்தியை காங்., இதழ் வெளியிட, அதனை பாஜ., விமர்சித்துள்ளது.
Samayam Tamil tanvi


ராணுவ வீரரின் மனைவி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் ராணுவ வீரர்களின் தியாகங்களை அரசியலாக்காதீர்கள் என அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை காங்., உறுப்பினர் ஒருவர் டுவிட்டரில் பகிர்ந்தார்.

வீடியோவில் பேசிய பெண், பாஜ., அரசியல் தலைவர்களைப் பற்றியோ அல்லது அக்கட்சி பற்றியோ குறிப்பிடவில்லை. ஆனால் செய்தி திரிக்கப்பட்டது. பாஜ., அரசியல்வாதிகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகளுக்காக ராணுவ வீரர்களின் தியாகத்தை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என அவர் கூறியதுபோல காங்., உறுப்பினர் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தர்.

காங்., கட்சியின் இளைஞரணி ஆன்லைன் இதழான யுவ தேஷ்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த திரித்த செய்தி வெளியாகியது. இந்த பெண் அபிநந்தனின் மனைவி என வதந்தியும் மேலும் பரப்பப்பட்டது. விசாரித்ததில் இவர் அபிநந்தனின் மனைவி கிடையாது எனத் தெரியவந்துள்ளது. அபினந்தனின் மனைவி தன்வி மார்வா, இந்திய விமானப் படையில் முன்னாள் விமானியாகப் பணியாற்றியவர்.

ராணுவ வீரரின் மனைவி, பாஜ.,வுக்கு அறிவுறை கூறியதாக காங்., இதழ் பொய் செய்தி பரப்பியதை அடுத்து பாஜ., டுவிட்டரில் கடுமையான காங்.,ஐ விமர்சித்துள்ளது. காங்., கட்சி இப்படி போலி விளம்பரம் தேடிக்கொள்வது மிகவும் கீழ்தரமான விஷயம் என பாஜ., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி