ஆப்நகரம்

அயோத்தி வழக்கு தீர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ராமர் கோவில் கட்டும் முடிவை வரவேற்றுள்ளது.

Samayam Tamil 9 Nov 2019, 1:40 pm
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 9) தீர்ப்பு வழங்கியுள்ளது.
Samayam Tamil அயோத்தி வழக்கு தீர்ப்பு


Babri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!

அதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் நிலம் தர மத்திய அரசுக்கும் உத்தரப்பிரதேச அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Babri Masjid Land: அயோத்தியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்ப்பு!!

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அயோத்தி வழக்கின் தீர்ப்பு வந்திருக்கிறது. அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடத்தில் கோயில் கட்டும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்ப்பானது கோயில் கட்ட வழிவகுத்ததோடு, பாஜக போன்ற கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது” என்று கூறினார்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு: மோடி ரியாக்‌ஷன்!

மேலும், “அனைத்து கட்சிகளும் அனைத்து சமூகங்களும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற விழுமியங்கள், சகோதரத்துவம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை அளித்து ஒற்றுமையுடம் செயல்படவேண்டும்” என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி