ஆப்நகரம்

காந்தியை சுட்டதால் கொதித்தெழுந்த காங்கிரஸ்; நாளை நாடே குலுங்கும் பெரிய அதிரடி!

புதுடெல்லி: நாடு முழுவதும் நாளை காங்கிரஸார் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Samayam Tamil 3 Feb 2019, 3:16 pm
தேசப்பிதா என்று இந்தியர்களால் அன்போடு அழைக்கப்படும் நபர் மகாத்மா காந்தியடிகள். இவரது நினைவு நாள் கடந்த ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் உத்தரப்பிரதேச மாநில அலிகார் இந்து மகா சபையின் தேசிய செயலாளர் சகுன் பாண்டே, காந்தியின் உருவப்படத்தை தன் கையில் உள்ள துப்பாக்கியால் சுட்டார்.
Samayam Tamil Congress


அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து காந்தியின் உருவ பொம்மையை சுட்டனர். பின்னர் சிவப்பு நிர திரவம் தெளிக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தினர். இதையடுத்து காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வை அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபையில் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்ட அறிவிப்பு விடுத்துள்ளனர். இதற்காக நாளை நாடு முழுவதும் காலை 10 மணி முதல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி