ஆப்நகரம்

இப்படி செஞ்சா 24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் - அதிர்ச்சியூட்டிய நட்வர் சிங்!

காங்கிரஸ் கட்சியில் இப்படியொரு நடவடிக்கை எடுக்காவிடில், இரண்டாக உடைந்து விடும் என்று மூத்த தலைவர் நட்வர் சிங் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Jul 2019, 1:48 pm
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்து பெறும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி இழந்தது.
Samayam Tamil Natwar Singh


இதற்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் எவ்வளவு முயன்றும் முடியவில்லை.

அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர் சிங், காந்தி குடும்பத்தில் அல்லாத நபரை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவை ராகுல் காந்தி திரும்ப பெற வேண்டும்.

அதேசமயம் பிரியங்கா காந்தியை தலைவராக்குவது பற்றி ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும். அவர் தான் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த எவரும் தலைவர் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டாரே.

இந்த முடிவை அவரது குடும்பம் மாற்றிக் கொள்ள வேண்டும். காந்தி குடும்பம் அல்லாத ஒருவர் கட்சி தலைமை பொறுப்பை ஏற்றால், 24 மணி நேரத்தில் காங்கிரஸ் இரண்டாக உடையும்.

ஆகஸ்ட் மாதம் பூட்டான் செல்லவுள்ள மோடி; இருநாட்டு வர்த்தகம் குறித்து ஆலோசனை!

ஏனெனில் கட்சியின் ஒரு தரப்பினர் அதனை ஏற்க மாட்டார்கள். 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்சிக்கு தலைவர் இல்லாதது, மிகவும் வேதனை அளிக்கிறது. காந்தி குடும்பத்தினர் அல்லாத தலைவரை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

அப்படியே பல்டி அடித்த முதல்வர்; கர்நாடக சட்டமன்றத்தில் இப்படியொரு ஷாக் கொடுத்த குமாரசாமி!

ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து, 50 நாட்களைக் கடந்தும் இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

GSLV Mk III: இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 2!

அடுத்த செய்தி