ஆப்நகரம்

கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Apr 2018, 9:46 pm
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil siddaramaiah_750_1523730887_618x347.


224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், இத்தேர்தலுக்கான 218 தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. முதல்வர் சித்தராமையா மீண்டும் சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி