ஆப்நகரம்

பிஹாரில் வாக்கு எண்ணிக்கை; எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் - உஷாரான காங்கிரஸ்!

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Samayam Tamil 9 Nov 2020, 4:46 pm
பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. 122 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணிக்கு வெற்றி வசமாகும். இதில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத் பந்தன் கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில், மகாகத் பந்தன் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Bihar Poll Results


டைம்ஸ் நவ் - சி-வோட்டர் முடிவுகள்

* தேசிய ஜனநாயகக் கூட்டணி - 116 இடங்கள்
* மகாகத் பந்தன் கூட்டணி - 120 இடங்கள்
* லோக் ஜனசக்தி கட்சி - 1 இடம்
* மற்ற கட்சிகள் - 6 இடங்கள்

டுடே சாணக்யா முடிவுகள்

* தேசிய ஜனநாயகக் கூட்டணி - 34 சதவீத வாக்குகள்
* மகாகத் பந்தன் கூட்டணி - 44 சதவீத வாக்குகள்
* மற்ற கட்சிகள் - 22 சதவீத வாக்குகள்

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா முடிவுகள்

* தேசிய ஜனநாயகக் கூட்டணி - 80 இடங்கள்
* மகாகத் பந்தன் கூட்டணி - 150 இடங்கள்

பிஹார் எக்ஸிட் போல்: சறுக்கும் பாஜக கூட்டணி - வெற்றிவாய்ப்பு யாருக்கு?

கருத்துக்கணிப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வந்ததை ஒட்டி, காங்கிரஸ் கட்சி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அதேசமயம் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதற்கு வாய்ப்பிருக்கதாக கூறப்படுகிறது. இதனால் உஷாரான காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, வாக்கு எண்ணிக்கையின் பார்வையாளர்களாக இருவரை பிஹாருக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, அவினாஷ் பாண்டே ஆகியோர் ஆவர்.

தேர்தல் நாளன்று நடக்கக்கூடிய விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் பிஹார் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தொடர்பில் இருப்பர் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி