ஆப்நகரம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்குக்காகச் சோனியா தலைமையில் கூட்டம்!

நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குச் செல்கிறார்கள்...

Samayam Tamil 19 May 2020, 6:14 pm
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு திடீரென மார்ச் 22ஆம் தேதி ஊரடங்கை அமல்படுத்தியது. அதுவரை நாட்டில் கொரோனா பரவி வந்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு குறித்து எந்தவித தகவல்களையும் மக்களுக்கு வெளியிடவில்லை.
Samayam Tamil புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்குக்காகச் சோனியா தலைமையில் கூட்டம்!
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலனுக்குக்காகச் சோனியா தலைமையில் கூட்டம்!


டிவியில் தோன்றி மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என்றார். பிரதமர் மோடி அறிவித்த திடீர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரம் தொடங்கி நாட்டில் வெவ்வேறு மாநிலத்திற்குச் சென்று பணி செய்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை மோசமடைந்தது.

பலர் நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நடந்தே செல்லத் தொடங்கினர். இப்படிச் சொல்பவர்கள் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

குறிப்பாக லாக்டவுன் 4வது முறை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இனி வேறு வழியேதுமில்லை எனக் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் நடந்தே கடக்கின்றனர்.

புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நிலையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டி வந்த காங்கிரஸ் கட்சி இப்போது களத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இன்று முதல் தினசரி 2,000 பேருந்துகள்; வாராந்திர பாஸ் - களைகட்டும் பெங்களூரு!

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் வழியாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு மத்திய அரசோடு எதிர்க்கட்சிகள் இணைந்து தீர்வுகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி