ஆப்நகரம்

நீதிபதி கர்ணனுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுத்துள்ளோம்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நீதிபதி கர்ணனுக்கு எதிராக நியாயமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதனையே எடுத்துள்ளோம் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

TNN 12 May 2017, 10:36 pm
நீதிபதி கர்ணனுக்கு எதிராக நியாயமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதனையே எடுத்துள்ளோம் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
Samayam Tamil conscious decision taken against justice karnan supreme court
நீதிபதி கர்ணனுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுத்துள்ளோம்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்


கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த காரணத்தால், அவருக்கு 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மேற்கு வங்க போலீசார் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

நீதிபதி கர்ணன் தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர், வங்கதேசம் அல்லது நேபாளத்திற்கு தப்பிச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிபதி கர்ணன் சார்பாக, அவரது வழக்கறிஞர் மன்னிப்பு கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் மீதான விசாரணையின்போது, நீதிபதிகள் அமர்வு, கர்ணன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைப் பற்றி நன்கு, ஆலோசித்து, தீர்மானம் செய்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த நடவடிக்கை அவசியமான ஒன்றே எனவும், கர்ணனின் நடவடிக்கையே இதற்குக் காரணம் எனவும் நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.

The Supreme Court on Friday said a “conscious decision” was taken by seven of its judges to sentence Calcutta High Court judge justice C.S. Karnan to six months imprisonment by holding him guilty of contempt.

அடுத்த செய்தி