ஆப்நகரம்

​ கைதிகளுக்கு ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடத்தி மகிழ்ந்த காவல்துறையினா்

கேரளா மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றில் கைதிகளை ஆடச்சொல்லியும், பாடச்சொல்லியும் காவல்துறையினா் மகிழ்ச்சியடைந்த சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

TOI Contributor 2 Nov 2017, 7:43 pm
கேரளா மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றில் கைதிகளை ஆடச்சொல்லியும், பாடச்சொல்லியும் காவல்துறையினா் மகிழ்ச்சியடைந்த சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
Samayam Tamil cop forces eveteasers to dance in undergarments inside tanur police station
​ கைதிகளுக்கு ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடத்தி மகிழ்ந்த காவல்துறையினா்


கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தரூர் காவல்நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டா் குற்றவாளிகள் 3 பேரை நேற்று முன்தினம் சிறையில் அடைத்துள்ளாா். இதனையடுத்து நேற்று இரவு காவல் நிலையத்தில் கைதிகள் மூன்றுபேரையும் அரை நிா்வாணமாக்கியுள்ளாா். மேலும் அவா்களை பாட்டு பாடச்சொல்லியும், பல்குரல்களில் பேசுமாறும் பணித்துள்ளாா்.

இதனையடுத்து கைதிகள் 3 பேரும் பாட்டுப்பாடியும், பல்குரல்களில் பேசியும் கவால்துறையினரை குதூகலப்படுத்தியுள்ளனா். இதனை அங்கிருந்த காவலாளி ஒருவா் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளயங்களில் வெளியிட்டுள்ளாா்.

இந்த காட்சிகளை பாா்த்த சமூக ஆா்வலா்கள் இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். கைதிகளை அரைநிா்வாணமாக்கி அவா்களை பாட்டுபாடச் சொல்லி மகிழ்ந்தது மனித உாிமைக்கு எதிரான ஒன்று என்று குற்றம் சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக அம்மாநில காவல்துறை உயா் அதிகாாி ஒருவா் கூறுகையில், தரூா் காவல்நிலைய இன்ஸ்பெக்டா் மற்றும் பாதிப்புக்குள்ளான கைதிகளிடம் உாிய விசாரணை நடத்தப்படும் என்று விளக்கம் அளித்துள்ளாா்.

அடுத்த செய்தி