ஆப்நகரம்

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? எந்தெந்த மாவட்டங்களுக்கு சிக்கல்?

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 11 Aug 2021, 11:00 am
தமிழ்நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கை, மக்கள் கடைபிடித்த ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக பாதிப்பு வேகமாக குறைந்து 2000க்கும் கீழ் குறைந்தது.
Samayam Tamil tn lockdown


படிப்படியாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரு வாரங்களில் சிறிய அளவில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இதனால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் நிலவியது. இதனால் தமிழ்நாடு அரசு பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியது.
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஷாக்: தள்ளாடும் தமிழக நிதி நிலைமை!
இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இயக்குநர் எஸ்.கே.சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது லவ் அகர்வால், “கொரோனா பரவல் குறைந்தபோதிலும், நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவகிறது. தமிழ்நாட்டில் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பரவல் அதிகரித்துவருகின்றன” என கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு: அத்தனை பணிகளும் தொடக்கம் - இந்த தடவை மிஸ் ஆகாது!
தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் ஊரங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும். அதே சமயம் கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கடைகள் திறக்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ஏழு மாவட்ட நிலவரம் குறித்து எச்சரிக்கை மணி அடித்துள்ள நிலையில் தமிழக அரசு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துமா, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேலும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுமா என்பது அடுத்து வரும் நாள்களில் தெரியவரும்.

அடுத்த செய்தி