ஆப்நகரம்

ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு பாதிப்பா? இந்தியாவை மிரட்டும் கொரோனா!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் புதுப் புது உச்சங்களை எட்டி வருகிறது.

Samayam Tamil 16 Jul 2020, 10:13 am
இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை மிக கடுமையாக உயர்ந்தபோது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
Samayam Tamil coronavirus cases


மக்கள் தொகை அதிகம் உள்ள போதிலும் கொரோனா பாதிப்பு இந்தியாவை ஒன்றும் செய்யவில்லை என்று பேசப்பட்டது. ஆனால் அந்த பேச்சு அடுத்த சில வாரங்களில் அர்த்தமற்றுப் போனது. இந்தியாவில் பாதிப்பு மிக அதிகளவில் அதிகரிப்பதுடன் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

மதுரையை மையமாகக் கொண்டு கிளை பரப்பும் கொரோனா!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 606 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்து 915ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 6.2 கோடி பேருக்கு கொரோனா - ’ஷாக்’ ரிப்போர்ட்!

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இதுவரை 6 லட்சத்து 12 ஆயிரத்து 815 பேர் நலமடைந்துள்ளனர். தற்போது 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அடுத்த செய்தி