ஆப்நகரம்

கொரோனா வைரஸ் பறந்துகூட உள்ள வர முடியாது, டஃப் கொடுக்கும் இந்தியா...

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குப் பரவி உள்ளதையடுத்து, இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் உள்பட 4நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2020, 10:20 am
ஈரான், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்பட்ட வீசா ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியை அடுத்து, இந்த உத்தரவை மத்திய அரசு பிறபித்துள்ளது.
Samayam Tamil coronavirus-china-virus-italy-hong-kong-flight-latest-1233909


சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் சுமார் 3ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இப்போதுவரை 2ஆயிரத்து 981பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாடு அறிவித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் 77பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 7பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இத்தாலியிலிருந்து ராஜஸ்தான் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் 21பேர் என 100க்கும் மேற்பட்டோரை மத்திய சுகாதாரத்துறை கண்காணிப்பில் வைத்துள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கணவனைத் தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா... இந்தியாவில் இது 7வது...

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவரதன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதற்கிடையே நாட்டில் இதுவரை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் “மன தைரியம்தான் முக்கியம்” எனக் கூறியுள்ளனர். இந்த சூழலில் போக்குவரத்து மூலமாக இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

அபார்ட்மெண்ட், ஆபிஸில் கொரோனா செக்கப்- ஐதராபாத் பொறியாளரால் பெங்களூருவில் பீதி!

அதன்படி இத்தாலி, ஈரான், ஜப்பான், தென் கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னர் வழங்கப்பட்ட வீசாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 70க்கும் மேற்பட்டோரைக் கண்காணிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியா போன்ற நாடுகளில் பெரியளவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி