ஆப்நகரம்

கொரோனா: பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் - முதல்வர் அதிரடி அறிவிப்பு

கடினமான காலங்களில் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 27 Apr 2020, 6:51 pm
புவனேஸ்வர்: கொரோனா வைரஸ் இடர்பாடுகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
Samayam Tamil நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்


கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்குகிறது. காவல்துறை, மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், வருவாய்துறையினர், தூய்மை பணியாளர்கள், பத்திரிகையாளார்கள் என களத்தில் அத்தியாவசிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா இடர்பாடுகளில் பணியாற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் பலரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்லும், செய்தியாளர்கள், கேமராமேன்கள், புகைப்பட செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

யெப்பாடா ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு முடிவு வந்திருச்சு...

நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும், நோய் பாதித்த பிற பகுதிகளுக்கு ஊடகத்துறையினர் செல்லும்போது, சுகாதாரம் மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், களத்தில் உள்ள தங்களது பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்குத் தேவையான நோய்த் தடுப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் ஊடகங்களின் நிர்வாகங்களுக்கு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இந்நிலையில், கொரோனா வைரஸ் இடர்பாடுகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த கடினமான காலங்களில் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் எனவும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி