ஆப்நகரம்

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை துவங்கியது

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இன்று மாலை முடிவுகள் வெளியாகிறது.

TOI Contributor 20 Jul 2017, 12:54 pm
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இன்று மாலை முடிவுகள் வெளியாகிறது.
Samayam Tamil counting of votes for presidential poll underway
குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை துவங்கியது


இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில், மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

மாலையில் யார் அடுத்த குடியரசுத் தலைவர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கிய ராம்நாத் கோவிந்திற்கு 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Counting of votes for presidential poll underway

அடுத்த செய்தி