ஆப்நகரம்

விஜய் பட பாணியில் திருமணம் செய்து அசத்திய காதலர்கள்!

நடிகர் விஜய் படமான பூவே உனக்காக பாணியில் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்துள்ளது.

TOI Contributor 9 Jun 2017, 5:43 pm
நடிகர் விஜய் படமான பூவே உனக்காக பாணியில் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்துள்ளது.
Samayam Tamil couples marriage like poove unakkaga style
விஜய் பட பாணியில் திருமணம் செய்து அசத்திய காதலர்கள்!


அந்த படத்தில் காதலித்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்து தன் காதலியை சிரமப்படுத்தாமல் விலகிவிடுவார் விஜய். இந்த படம் கலப்பு திருமணம் பற்றிய கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது. இதே பாணியில் கர்நாடகாவில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து அசத்தியுள்ளனர்.

கர்நாடகாவின் கார்வார் அருகே உள்ள கிராமம் யல்லபுரா. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகீம்கான், காளம்மா.இவர்கள் ஆரம்பக் காலத்தில் நட்பாக பழகி பின் காதல் உறவில் இணைந்தவர்கள். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

முஸ்லீம், இந்து மத வேறுபாடு ஒரே காரணம் காட்டி இவர்களது இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு கூறியுள்ளனர். மதம் தான் இவர்களது காதலுக்கு பெரும் தடையாக இருந்து வந்தது. இதற்கு தீர்வாக ரகீம் கான் ஆர்யாவாக இந்து மகனாக மாறி, தனது காதலி காளம்மாவை பூவே உனக்காக பாணியில் திருமணம் செய்து கொண்டார்.

அடுத்த செய்தி