ஆப்நகரம்

கிடுகிடுவென உயர்ந்த கொரோனா தொற்று; இந்தியாவில் இதுவரை இல்லாத பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 5 Jun 2020, 1:27 pm
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. எனினும், கொள்ளை நோயான கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்து வருகிறது. நாள்தோறும் நாடு முழுவதுமான கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மாநில பாதிப்பு விவரங்களை அந்தந்த மாநில அரசுகளும் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளதாகவும், 1,10,960 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348ஆக அதிகரித்துள்ளது.

ஒருத்தரா? மூன்று பேரா? - கேரள யானை கொலை வழக்கில் முக்கிய அப்டேட்!

இதுவரை 1,09,462 பேர் குணமடந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 273 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 70,000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி