ஆப்நகரம்

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனை தொடங்கப்படவுள்ளது

Samayam Tamil 7 Feb 2021, 4:51 pm
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவை பொறுத்தவரை, புனேவில் இயங்கிவரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசர தேவைக்கு பயன்படுத்த தேசிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது. முன்னதாக, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வயதுக்கு குறைவானவர்களுக்கு பரிசோதனை செய்யப்படவில்லை. எனவே, குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2 வயது முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனையை பாரத் பயோடெக் தொடங்கவுள்ளது. இதற்கான அனுமதியை அந்நிறுவனம் மத்திய அரசிடம் கோரியுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இதற்கான பரிசோதனை தொடங்கப்படும் என்று தெரிகிறது.

அதன்படி, 2 வயதில் இருந்து 5 வயது வரை, 6 வயதில் இருந்து 12 வயது வரை, 12 வயதில் இருந்து 18 வயது வரை என 3 பிரிவுகளில் இந்த பரிசோதனையானது நடைபெறும் என்று தெரிகிறது. உலகிலேயே குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நாங்கள் தான் முதன் முதலாக நடத்துகிறோம் என்று பாரத் பயோடெக் நிறுவன பரிசோதனை குழு ஒருங்கிணைப்பாளர் அசிஸ் தஜ்னே தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: 3 பேரின் சடலங்கள் மீட்பு!

ஏற்கனவே மருந்தை சோதனை செய்த இடங்களிலேயே இந்த சோதனையும் நடைபெறும். குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்த பரிசோதனையை நடத்தவிருக்கிறோம். இதற்காக மருத்துவமனைகளின் அனுமதியை பெற்று வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி