ஆப்நகரம்

கொரோனாவிற்கு பலி; தகனம் செய்யப்பட்ட நோயாளி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!

வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர் எவ்வாறு மீண்டும் வந்தார் என்று இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 23 Nov 2020, 10:08 am
மேற்குவங்க மாநிலம் பல்ராம்பூர் பாசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த நவம்பர் 4ஆம் தேதி ஷிப்தாஸ் பானர்ஜி (75) என்ற முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் நவம்பர் 13ஆம் தேதி பானர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் பானர்ஜியின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை தகனம் செய்து இறுதிச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து பானர்ஜிக்கு காரியம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்து வந்தனர்.
Samayam Tamil Corona Patient Alive in WB


அப்போது மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பானர்ஜி உயிரோடு தான் இருக்கிறார். அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகி விட்டார். தவறுதலாக வேறொரு நோயாளியின் உடலை ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்த்த போது, அங்கு பானர்ஜி உயிருடன் இருந்துள்ளார். அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதுபற்றி விசாரிக்கையில் மோகினிமோகன் முகர்ஜி (75) என்ற மற்றொரு நோயாளியின் உடலை தவறுதலாக ஒப்படைத்தது தெரியவந்தது.

ஒரு கிராமத்துக்கே கொரோனா: ஷாக்கில் அதிகாரிகள்!

இவரும் அதே நவம்பர் 4ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பாராசாட்டில் உள்ள சிகிச்சை மையத்திற்கு மோகினிமோகனை அனுப்பி வைத்தனர். அப்போது ஷிப்தாஸ் பானர்ஜியின் மருத்துவ ரிப்போர்ட்டை மாற்றிக் கொடுத்துள்ளனர்.

இதுதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உடல் முழுவதும் மூடப்பட்டிருந்ததால் இறந்த நோயாளியின் முகத்தைக் காணும் வாய்ப்பும் இல்லாமல் போனது. இந்த சம்பவம் மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி