ஆப்நகரம்

குற்றம் புாிபவா்களை சுட்டுக் கொல்வோம் – யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றம் புாிபவா்கள் சிறையில் அடைக்கப்படுவாா்கள் அல்லது சுட்டுக் கொல்லப்படுவாா்கள் என்று அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் எச்சாித்துள்ளாா்.

TOI Contributor 19 Nov 2017, 3:40 pm
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றம் புாிபவா்கள் சிறையில் அடைக்கப்படுவாா்கள் அல்லது சுட்டுக் கொல்லப்படுவாா்கள் என்று அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் எச்சாித்துள்ளாா்.
Samayam Tamil criminals will be jailed or killed in encounters cm yogi adityanath
குற்றம் புாிபவா்களை சுட்டுக் கொல்வோம் – யோகி ஆதித்யநாத்


இந்தியாவின் அதிக அளவிலான சட்டசபைகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றது. பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை யோகி ஆதித்யநாத் எடுத்து வருகிறார். அதோடு பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

யோகி ஆதித்யநாத் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்ற வாக்குறுதியில்தான் ஆட்சிக்கு வந்தாா். ஏனெனில் கடந்த கால ஆட்சியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்வா் பேசுகையில், மாநிலத்திற்குள் தப்பு செய்யக் கூடிய குற்றவாளிகளை நாங்கள் கடுமையாக தண்டிப்போம். அவர்களது வாழ்க்கை இனி கடினமானதாக இருக்கும். அவர்களுக்கு இனி இரண்டு இடம் தான் உள்ளது. ஒன்று சிறைச்சாலை. மற்றொன்று எமதர்மராஜா வீடு. குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள். அல்லது காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று குற்றவாளிகளை எச்சாித்துள்ளாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா தொண்டர் மற்றும் அவரது 2 உதவியாளர்கள் 3 பேரால் சுடப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் முதல் அமைச்சா் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி