ஆப்நகரம்

26 வயதில் வீரமரணம் அடைந்த ஜவான் மகேஷ்

அகமதாபாத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் ஜவான் மகேஷ் (26). புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக உயிர் நீத்தவர். சிறுவயதுமுதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை புரிவதை கனவாகக் கொண்டவர்.

Samayam Tamil 16 Feb 2019, 1:03 pm
அகமதாபாத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் ஜவான் மகேஷ் (26). புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக உயிர் நீத்தவர். சிறுவயதுமுதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை புரிவதை கனவாகக் கொண்டவர்.
Samayam Tamil mahesh


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 46 பேர் நேற்று கொல்லப்பட்டனர். இதில் 44 பேர் காயமடைந்துள்ளனர். 31 பேர் கொல்லப்பட்ட, ஜம்மு அருகே கலூசாக் ராணுவ தளம்மீது 2002இல் நடத்தப்பட்ட தாக்குதலே இந்தியப் பாதுகாப்பது படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை மிகப்பெரிய தாக்குதலாக இருந்தது.

1989-இல் 10 தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவே கார் மூலம் நிகழ்த்தப்படும் இரண்டாவது தாக்குதல் ஆகும். இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கிய 1989க்கு பிறகு, இந்தியப் படைகள் மீது நடத்தப்படும் மோசமான தாக்குதல் இதுவாகும்.

அகமதாபாத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் ஜவான் மகேஷ் (26). புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக உயிர் நீத்தவர். சிறுவயதுமுதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை புரிவதை கனவாகக் கொண்டவர். அலகாபாத்தில் உள்ள சிறு கிராமம் இவரது பூர்வீகம். சமர், சோஹில் என்ற 6 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு தந்தை இவர். 7 வருடங்களாக இவரது மனைவி சஞ்சு தேவியுடன் வாழ்ந்த இவர் தற்போது சகோதரி, பெற்றோர், மனைவி, பிள்ளைகளை விட்டு மறைந்ததை அவரது மனைவியால் ஏற்கமுடியாமல் கதறுகிறார்.

அப்பகுதி பாஜ., எம்எல்ஏ மகேஷ் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். தந்தை காலமானதை அறியாத வயது சமருக்கும் சோஹீலுக்கும். எதற்காக தன் வீட்டுக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்கிறார்கள் எனத் தெரியாமல் வாசலில் அனைவரையும் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள். இவர்களை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பது மகேஷின் கனவாக இருந்தது என உறவினர்கள் கூறுகின்றனர். மகேஷின் பெற்றோர்கள் மும்பையில் வசித்து வருகின்றனர். மகனின் உடலைக் காண அலகாபாத் வந்துகொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி