ஆப்நகரம்

லக்னோ நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

லக்னோவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில், மேலும் 3 குண்டுகளை சம்பவ இடத்தில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

Samayam Tamil 13 Feb 2020, 1:50 pm
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil லக்னோ குண்டு வெடிப்பு
லக்னோ குண்டு வெடிப்பு


நாடு முழுவதும் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கி வழக்கறிஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மூவரும் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சற்றுமுன் பயங்கரம்: இந்தியன் ஆயில் குடோன் அருகே தீ விபத்து... 2 பேர் பலி 3 பேர் கவலைக்கிடம்...

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மேலும் 3 குண்டுகளை சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இரு தரப்பு வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக இந்த குண்டு வெடிப்பு சமப்வம் நிகழ்ந்துள்ளதாகவும், லக்னோ வழக்கறிஞர்கள் சங்கத்தின் இணை செயலாளர் சஞ்சீவ் லோதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், குண்டு வீச்சுக்கு மற்றொரு வழக்கறிஞரான ஜீத்து யாதவ் காரணமாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி