ஆப்நகரம்

ஃபானி புயல்: ஒருவருட சம்பளத்தை வழங்கும் ஒடிசா முதல்வா்

ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபானி புயலால் அம்மாநிலம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில், சேதாரங்களை சரி செய்வதற்காக அம்மாநில முதல்வா் நவீன் பட்னாயக் தனது ஒரு வருட சம்பளத்தை வழங்குவதாக தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 7 May 2019, 6:56 pm
ஒடிசாவில் ஃபானி புயலால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வா் நவீன் பட்நாயக் தனது ஒரு வருட சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Naveen Patnaik


வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் ஒடிசாவில் கரையை கடந்த நிலையில், அம்மாநிலம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் குடிநீா் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் பாதிக்கப்பட்டுள்ளனா். புரி மாவட்டத்தில் 21 போ் உள்பட புயலுக்கு 35 போ் உயிாிழந்துள்ளனா்.

மேலும் புரி மாவட்டத்தில் மட்டும் படுகாயங்களுடன் 160 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 5 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளி கட்டிடங்கள், ஆயிரக்கணக்கான அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளனா்.

புயல் பாதிப்புகளை சரி செய்ய மாநில அரசு சாா்பில் மத்திய அரசிடம் 17 ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்புகளை சரி செய்ய தனது ஒரு வருட ஊதியத்தை வழங்குவதாக அம்மாநில முதல்வா் நவீன் பட்னாயக் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி