ஆப்நகரம்

விவசாயிகள் போராட்டம்: ஜிபிஎஸ் உதவியுடன் உணவளிக்கும் டப்பாவாலாக்கள் !

மகாராஷ்டிராவில் இடதுசாரி முன்னணி ஆதரவு விவசாயிகளின் போராட்டத்திற்கு டப்பாவாலாக்கள் ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தி உணவு வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 12 Mar 2018, 5:59 pm
மகாராஷ்டிராவில் இடதுசாரி முன்னணி ஆதரவு விவசாயிகளின் போராட்டத்திற்கு டப்பாவாலாக்கள் ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தி உணவு வழங்கியுள்ளனர்.
Samayam Tamil dabbawala supplies food for the maharashtra farmers protest
விவசாயிகள் போராட்டம்: ஜிபிஎஸ் உதவியுடன் உணவளிக்கும் டப்பாவாலாக்கள் !


விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிஸான் சபா அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி நடைப்பயணத்தைக் கடந்த வாரம் தொடங்கினர். சுமார் 180 கி.மீ தூரம் நடைப்பயணமாக அவர்கள் இன்று மும்பை வந்தடைந்தனர்.

இந்த மாபெரும் போராட்டத்தில் சுமார் 30, 000 மேற்பட்ட விசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள ஆசாத் மைதானத்தில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா சட்டசபையை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்
இந்த நிலையில் விவசாயிகளுக்கு உணவளிக்க ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் டப்பாவாலாக்கள் உணவை கொண்டு செல்கின்றனர்.

யார் இந்த டப்பாவாலாக்கள் ?

டப்பாவாலாக்கள் மும்பையில் பல வருடங்களாக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அலுவலகம் செல்பவரகளுக்கு, வீட்டில் இருந்து கொடுக்கப்படும் மதிய உணவை கொண்டு கொடுப்பதே இவர்கள் வேலை.

ஜிபிஎஸ் எதற்கு

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த காரணம் இருக்கிறது. யாரிடம் அதிக உணவு இருக்கிறதோ, அவர்கள் டப்பாவாலாக்களின் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தங்களது இருப்பிடத்தை கூகுள் மேப் கொண்டு அனுப்பிவிடுகிறார். அவர்களுக்கு அருகில் இருக்கும் டப்பாவாலா ஜிபிஎஸ் மூலம் அதை கண்டுபிடித்து சென்று உணவை வாங்கி கொள்கிறார்கள்.

அடுத்த செய்தி