ஆப்நகரம்

அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை – முதல்வா் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Nov 2018, 12:31 pm
அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Yogi Adityanat


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மீண்டும் ராமா் கோவில் கட்டப்படும் என்று பா.ஜ.க. அரசு தொிவித்து வரும் நிலையில். கடந்த 6ம் தேதி உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தீபாவளி கொண்டாடினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றாா்.

மேலும் அயோத்தியில் மருத்துவக் கல்லூாி, விமான நிலையம் உள்ளிட்டவையும் அமைத்து தரப்படும் என்று அறிவித்தாா். இந்நிலையில் பா.ஜ.க.வினரால் புனித பூமி என்று அழைக்கப்படும் அயோத்தியில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா். தடை உத்தரவு மாவட்டம் முழுவதற்கும் பொருந்தும் என்று தொிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மக்கள் கூறுகையில், இப்பகுதியில் 240க்கும் அதிகமான இறைச்சி கடைகள் உள்ளன. அவற்றை தடை செய்வதால் பலரும் வேலை வாயப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி