ஆப்நகரம்

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி; அடுத்த அதிரடி ஆரம்பம்!

இரண்டு வகையான தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 3 Jan 2021, 1:09 pm
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்ததை அடுத்து பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாக கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது. பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரைத்தது.
Samayam Tamil Coronavirus Vaccine


இதனையும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்தது. இந்நிலையில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி வழங்கி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று (ஜனவரி 3) உத்தரவிட்டுள்ளது. இவற்றை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி ஓகே ஆகிருச்சு: ஹேப்பி நியூஸ்!
இதையடுத்து பொது பயன்பாட்டிற்கு தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விரைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மருந்துகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு DCGI ஒப்புதல் அளித்திருப்பது மிகப்பெரிய திருப்புமுனையாகும்.

இதன்மூலம் கொரோனா இல்லாத தேசத்தை நோக்கி செல்வதற்கான ஆரோக்கியமான வழித்தடம் போடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் உழைப்பை செலவழித்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடர் பூனவாலா தனது ட்விட்டரில், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கஞ்சா, சிகரெட்: திசை மாறும் விசாரணை
தடுப்பூசிக்காக எடுக்கப்பட்ட அனைத்து உழைப்பிற்கும் பலன் கிடைத்துவிட்டது. கோவிஷீல்ட், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி. அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி