ஆப்நகரம்

கியூட் (CUET) தேர்வு எப்போது நடைபெறும்..? - தேதி அறிவிப்பு எப்போது..?

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பயில பயில க்யூட் எனும் நுழைவு தேர்வு அவசியமாக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்தது.

Samayam Tamil 7 Aug 2022, 10:38 pm
இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் (CUET) தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை மூலம் கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்.7-ம் தேதி தொடங்கி மே 31-ம்தேதியுடன் நிறைவு பெற்றது.
Samayam Tamil CUET Exam


நாடு முழுவதும் 500 நகரங்கள் மற்றும் இந்தியாவின் வெளியில் உள்ள நகரங்கள் என 2 கட்டங்களாக கியூட் தேர்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான கியூட் நுழைவுத்தேர்வு கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. காலை, மாலை 2 ஷிப்ட்டுகளாக தேர்வுகள் நடக்க இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 17 மாநிலங்களில் சில மையங்களில் முதல் ஷிப்ட் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

மாலை ஷிப்ட் தேர்விலும் 489 மையங்களில் தொழில்நுட்ப கோளாறால் தேர்வு நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினமும் சில பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வுகள் ரத்தாகின. இதனால் மாணவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக கோளாறுகளால் தேர்வு ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தேர்வுக்கு சில நாட்கள் முன்னதாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி