ஆப்நகரம்

100 நாள் வேலைத்திட்டத்தில் நடிகைகளின் போட்டோ: உஷார் மக்களே!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டையில் நடிகைகளின் போட்டோவை வைத்து மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

Samayam Tamil 16 Oct 2020, 11:16 pm
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
Samayam Tamil தீபிகா படுகோன் புகைப்படம்
தீபிகா படுகோன் புகைப்படம்


இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.229 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், பணியாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் நடிகைகளின் போட்டோவை வைத்து மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நீட் தேர்வில் 100% மதிப்பெண்: முதலிடத்தை பிடித்த ஒடிசா மாணவர்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சோனு ஷாந்திலால் என்பவரது அடையாள அட்டையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், மோனு துபே என்பவரது அடையாள அட்டையிலும் தீபிகா படுகோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மோனு துபே கூறுகையில், தீபிகா படுகோனின் புகைப்படம் அடையாள அட்டையில் இடம்பெற்றதில் இருந்து தனது பெயரில் ரூ.30,000 எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் இது தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோன்று வேறு சிலரது அடையாள அட்டையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி