ஆப்நகரம்

டெல்லி பாஜக தலைவர் டெல்லியை விட்டு வெளியேற வேண்டி வரும் : அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி : தேசிய குடிமக்கள் பதிவேடு டெல்லியில் அமல்படுத்தப்படால், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி டெல்லியை விட்டு வெளியேற வேண்டி வரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2019, 2:14 pm
டெல்லி : தேசிய குடிமக்கள் பதிவேடு டெல்லியில் அமல்படுத்தப்படால், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி டெல்லியை விட்டு வெளியேற வேண்டி வரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்துள்ளார்.
Samayam Tamil delhi bjp state president will have to leave delhi arvind kejriwal
டெல்லி பாஜக தலைவர் டெல்லியை விட்டு வெளியேற வேண்டி வரும் : அரவிந்த் கெஜ்ரிவால்

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் அண்மைக்காலமாக சூடு பிடித்துள்ளது. 2018ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட குடிமக்கள் ஆய்வின் படி வெளிவந்த குடிமக்கள் பதிவேட்டில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சேர்க்கப்படாமல் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது..

இதனையடுத்து இந்த விவகாரம் நாடு முழுக்க பரவி பல தரப்பிலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

மேற்கு வங்கம், டெல்லி ஆகிய பகுதிகளிலும், இதேபோல பதிவேடு தயார் செய்ய வேண்டும் என்று பாஜக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால், டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி டெல்லியை விட்டு வெளியேற வேண்டி வரும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்..
இதேபோல மேற்கு வங்கத்தில் ஒருபோதும் இதை அமல்படுத்த விடமாட்டோம் என்று மமதா பானர்ஜி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது...

அடுத்த செய்தி