ஆப்நகரம்

டெல்லி கலவரம்: சாக்கடை கால்வாயில் இருந்து புலனாய்வு அதிகாரி உடல் மீட்பு!!

டெல்லியில் சந்த் பாக் பகுதியில் வன்முறையாளர்களால் புலனாய்வு அதிகாரி அங்கிட் சர்மா கொல்லப்பட்டு சாக்கடை கால்வாயில் வீசப்பட்டு இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Feb 2020, 3:50 pm
டெல்லியில் காணாமல் போய் இருந்த புலனாய்வு அதிகாரி அங்கிட் சர்மாவின் உடல் சாக்கடை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil அங்கிட் சர்மா


டெல்லியின் வடகிழக்கில் கஜூரி காஸ் பகுதியைச் சேர்ந்தவர் அங்கிட் சர்மா. வயது 26. இவரை கடந்த செவ்வாய் கிழமை கும்பல் ஒன்று கடத்தி சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து இவரை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் சாக்கடை கால்வாயில் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டனர். புலனாய்வுத் துறையில் உதவி பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் அங்கிட். தனது குடும்பத்தினருடன் கஜூரி காஸ் பகுதியில் வசித்து வந்தார்.

பாதிக்கப்பட்டவர்களை நேரில் பாருங்கள்: கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அங்கிட் வீடு இருக்கும் பகுதிக்கு வந்த ஒரு கும்பல் கற்களை வீசின. தங்களை காப்பாற்றுமாறு அங்கிட் சர்மாவை அவரது குடும்பத்தினர் அழைத்துள்ளனர். தெருவுக்கு சென்ற அங்கிட் சர்மாவை ஒரு கும்பல் தடுத்தது. பின்னர் அவரை அடித்ததுடன், அந்தக் கும்பல் கடத்தியும் சென்றது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் சாக்கடை கால்வாய்களில் தேடுமாறு அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள் தேடியதில் அவரது உடல் மீட்கப்பட்டது'' என்றார்.

டெல்லி கலவரம்: ஒருவழியா மோடி வாயைத் திறந்துவிட்டார்!

கலவரம் குறித்து டெல்லி நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதரன் இன்று கருத்து தெரிவிக்கையில், ''அங்கிட் சர்மா கொல்லப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது. இசட் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் தேவை என்பது தற்போது தெளிவாகிறது'' என்றார்.

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித் ஷா ராஜினாமா செய்ய சோனியா கோரிக்கை!!

புலனாய்வுத்துறையில் தலைமை காவலராக பணியாற்றுபவர் அங்கிட் சர்மாவின் தந்தை தேவேந்திர சர்மா. இவர் தனது தந்தையின் சாவு குறித்து கூறுகையில், ''அங்கிட் சர்மாவை அடித்து பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தற்போது அங்கிட் சர்மாவின் உடலை போலீசார் மீட்டுச் சென்று, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 2017ல் புலனாய்வுத்துறையில் அங்கிட் சேர்ந்தார்'' என்றார்.

அடுத்த செய்தி