ஆப்நகரம்

ஆதாயத்திற்காக இந்துகளை கொல்ல பாஜக 2 நிமிடம் கூட யோசிக்காது – கெஜ்ரிவால்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாாி கொலை தொடா்பாக கருத்து தொிவித்த டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றால் பா.ஜ.க. இந்துகளை கொலை செய்ய 2 நிமிடம் கூட யோசிக்காது என்று குறிப்பிட்டுள்ளா்ா.

Samayam Tamil 30 Sep 2018, 10:13 pm
அதிகாரத்தை பிடிக்கவேண்டும் என்றால் பா.ஜ.க. இந்துகளை கொலை செய்ய பா.ஜ.க. 2 நிமிடம் சூட யோசிக்காது என்று டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Aravind Kejriwal 1


உத்தரபிரதேச மாநிலத்தில் காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி, ஆப்பிள் நிறுவன அதிகாாி விவேக் திவாரி காவல்துறையினரால் கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் “விவேக் திவாரி ஒரு இந்து. பின்னா் எதற்காக அவா் கொல்லப்பட்டாா். பா.ஜ.க. இந்துகளின் நலன் விரும்பி கிடையாது. அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. அனைத்து இந்துகளையும் கொலை செய்ய 2 நிமிடம் கூட யோசிக்காது” என்று கருத்து தொிவித்திருந்தாா்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்திற்கு பதில் அளித்துள்ள, டெல்லி பா.ஜ.க. தலைவா் மனோஜ் திவாரி, அரவிந்த் கெஜ்ரிவால் எவ்வளவு குறுகிய மனம் கொண்டவா் என்பதை பாருங்கள். விவேக் திவாரி குடும்பத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. உள்ளது. இந்த கொலைக்கு காரணமானவா்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி