ஆப்நகரம்

முதல்வருக்கு கொரோனா? - பரிசோதனை முடிவு இதுதான்!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரும், அவரது ஆதரவாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 9 Jun 2020, 8:17 pm
டெல்லியில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவால் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து விளக்கம அளித்து வந்தார்.
Samayam Tamil ak


நேற்றைய தினம் ( ஜூன் 8) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டெல்லியில் வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுவது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு தொண்டை வலி, லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் கொரோனா பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, இவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பா?

இதையடுத்து, அவருக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதனை அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரது ஆதரவாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.


கெஜ்ரிவாலுக்கு ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளது. இதையொட்டி இன்சுலின் மற்றும் பிற மருந்துகளை அவர் எடுத்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி