ஆப்நகரம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பா?

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பின் லேசான அறிகுறிகள் தென்பட்டதால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Samayam Tamil 8 Jun 2020, 1:18 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவின் கொரோனா பாதிப்பு பட்டியலில் டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்று நண்பகல் நிலவரப்படி டெல்லியில் 28,936 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10,999 பேர் குணமடைந்துள்ளனர். 812 பேர் பலியாகியுள்ளனர். 17,125 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக வைரஸ் தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முடுக்கி விட்டுள்ளார்.
Samayam Tamil அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லியில் கொரோனா பாதிப்பு பற்றி அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து கெஜ்ரிவால் விளக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லியில் மால்கள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுவது பற்றி விளக்கம் அளித்தார்.

முஸ்லீம் நோயாளிகளுக்கு ’நோ’? - சர்ச்சை சாட்டிங்கால் சிக்கலில் மாட்டிக் கொண்ட மருத்துவமனை!

இந்நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொண்டை வலி மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது கோவிட்-19 பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதையொட்டி நாளை அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்படவுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது. இதையொட்டி இன்சுலின் மற்றும் பிற மருந்துகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சமீபத்தில் சந்தித்த அரசு அதிகாரிகள், செய்தியாளர்கள், அமைச்சர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் கொரோனா பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும்.

ஒரு கோடி பேருக்கு வேலை; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நல்ல வாய்ப்பு - பக்கா பிளான் ரெடி!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோவிட்-19 அறிகுறிகள் தென்படுகின்றன என்ற செய்தி டெல்லி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி