ஆப்நகரம்

மாரடைப்பா? டூ வீலரில் விரையும் மருத்துவ குழு... டெல்லி எய்ம்ஸ் சாதனை...

இந்தியாவிலேயே மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உரிய மருத்துவ சிகிச்சையை விரைவாக அளிக்கக்கூடிய வகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விரைவு மருத்துவ உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Feb 2020, 2:36 pm
டெல்லி அரசு மருத்துவம் மற்றும் கல்வி துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. அதற்கு தனியார் நிறுவனங்களும் பங்களிப்பை அளித்து வருகின்றன. அந்த வகையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை பத்தே நிமிடத்திற்குள் அவர்களது இடத்திற்கு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் Delhi Emergency Life Heart Attack initiative என்ற திட்டத்தை எய்ம்ஸ் தொடங்கியுள்ளது.
Samayam Tamil டூ வீலரில் விரையும் மருத்துவ குழு டெல்லி எய்ம்ஸ் சாதனை


அதாவது, ஃபுட் டெலிவெரியை போல, இரு சக்கரவாகனத்தில் மாரடைப்பு நோயாளிக்கு அளிக்கக்கூடிய அனைத்து முதலுதவி சிகிச்சை உபகரணங்களோடு மருத்துவ உதவியாளர் அவசர பணியில் இருப்பார். அவர் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் யாருக்காவது திடீர் மாரடைப்பு ஏற்பட்டால், அவசர எண்ணை தொடர்பு கொள்வது மூலமாக நோயாளின் இடத்திற்கே அந்த மருத்துவ உதவியாளர் சென்றடைவார்.

இதனால் அதிகபட்சம் பத்து நிமிஷத்துக்குள் நோயாளிக்கு ஈசிஜி போன்ற அடிப்படை சிகிச்சையை மேற்கொண்டு மருந்துகள் ஏற்றப்படும். இதற்கிடையில் அம்புலன்சும் வரவழைக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய நோயாளியை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார். எய்ம்ஸ் மருத்துவமனை இந்த சேவையை தொடங்கியது முதல் இதுவரை 80 நோயாளிகள் பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

லக்னோ நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறுகையில், '' நோயாளிகளின் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல், தூரம் காரணமாக நோயாளிகளின் இடத்திற்கு சென்றடைவது தாமதமாகிறது. மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு உடனே சிகிச்சை தர வேண்டியது அவசியம். அதனால் ஏற்படும் தாமதத்தால் பல உயிர்களை காப்பாற்ற முடியாமல் போகிறது. ஆகையால் டூ வீலரில் கையாளப்படும் இந்த சேவையால் கடுமையான போக்குவரத்து நெரிசலையும், எப்பேர்ப்பட்ட சாலையையம் எளிதாக கடந்து நோயாளியின் இடத்தை சென்றடையலாம் என தெரிவித்தார்.

அடுத்த செய்தி