ஆப்நகரம்

பத்ம விருதுகளுக்கு இவர்களது பெயர்கள் பரிந்துரை - டெல்லி அரசு அதிரடி!

பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பெயர்களை பரிந்துரைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 27 Jul 2021, 4:52 pm

ஹைலைட்ஸ்:

  • பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பெயர்களை பரிந்துரைக்க டெல்லி அரசு முடிவு
  • மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Padma-award
பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பெயர்களை பரிந்துரைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என, பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதை அடுத்து, கொரோனாவுக்கு எதிரானப் போரில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஓய்வில்லாமல் உழைத்து வருவதால், அவர்களை கவுரவிக்கும் வகையில், பத்ம விருதுகள் வழங்க வேண்டும் என, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தாண்டுக்கான பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. நாம் நன்றியுடைவர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களை கவுரவிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்போது? - மத்திய அமைச்சர் சொன்ன தகவல்!
இதற்கானப் பெயர்களை மக்கள் எங்களிடம் தெரிவிப்பார்கள். ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் padmaawards.delhi@gmail.com என்ற மெயிலுக்கு பெயர்களை அனுப்பலாம். கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளோம்.

ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து 15 நாட்களில் மக்கள் பரிந்துரைத்த பெயர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களை கண்காணிப்புக் குழு அரசிடம் பரிந்துரைக்கும். அதன்பி றகு இறுதிப் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி