ஆப்நகரம்

#MeToo வழக்கு நடக்கும்போது பேட்டி கொடுக்கக் கூடாது: டெல்லி நீதிமன்றம்

சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எந்தவொரு மூன்றாம் நபரின் கருத்தையும் கேட்கக் கூடாது.

Samayam Tamil 12 Oct 2018, 7:48 pm
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் மனுதாரரும் எதிர் மனுதாரரும் வழக்கு முடியும் வரை ஊடங்களுக்கு பேட்டி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
Samayam Tamil delhi-high-court


டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த ஆண்டு ஆன்லைன் செய்தி இணையதளத்தின் ஊழியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில், அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்து தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ள #MeToo இயக்கத்தில் தனது புகாரையும் ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

இதனால் குற்றம்சாட்டப்படும் செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் சார்பில் பெண் பத்திரிகையாளர் ஊடகங்களுக்கு அவதூறாக பேட்டி அளிப்பதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, “வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே ஊடங்களுக்கு எந்த விதமான பேட்டியும் கொடுக்கக் கூடாது. சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எந்தவொரு மூன்றாம் நபரின் கருத்தையும் கேட்கக் கூடாது” என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி