ஆப்நகரம்

2ஜி மேல்முறையீட்டு மனு விசாரணை பிப். 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு- டெல்லி உயர்நீதிமன்றம்

2ஜி ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிப்.7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2018, 4:04 pm
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட 19 பேர் விடுவிடுக்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி, ஆ. ராசா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் செய்யவில்லை.
Samayam Tamil cover-pic
2ஜி மேல்முறையீட்டு மனு விசாரணை பிப்.7ம் தேதிக்கு ஒத்திவைப்பு


2007 மற்றும் 08ம் ஆண்டுகளில் நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ 2011ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் திமுக-வின் ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதாக கூறி, வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பாட்டியால நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீட்டு மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கில் சம்மந்தப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 நபர்களும் உரிய விளக்கம் அளிக்கச் சொல்லி நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிபிஐ மனுவுக்கு யாரும் விளக்கம் அளித்து மனு அளிக்கவில்லை.

அதை தொடர்ந்து மீண்டும் இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கனிமொழி உள்ளிட்டோர் தங்கள் தரப்பு விளக்கங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை

இதன் காரணமாக வழக்கை விசாரித்த நீதிபதி நஜிமீ வசிரி அடங்கிய அமர்வு, 2ஜி வழக்கு தொடர்பான சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனுவை வரும் பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி