ஆப்நகரம்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஜொலிக்கும் டெல்லி

சுதந்திர தினவிழாவை ஒட்டி இந்தியா கேட், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

TNN 15 Aug 2016, 1:26 am
டெல்லி: சுதந்திர தினவிழாவை ஒட்டி இந்தியா கேட், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil delhi monuments lit up on the eve of 70th independence day
சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஜொலிக்கும் டெல்லி


நாடு முழுவதும் இன்று 70வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி சிறப்புரை ஆற்ற உள்ளார். இதனால் செங்கோட்டை பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்நிலையில் முதல் உலகப் போரின் நினைவுச் சின்னமாக திகழும் இந்தியா கேட் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து, புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
Delhi: India Gate illuminated with the tricolour, on the eve of 70th Independence Day. pic.twitter.com/DLGI1NDcCU— ANI (@ANI_news) August 14, 2016
இதேபோல் குடியரசுத் தலைவர் மாளிகை, ரைசினா ஹில், நாடாளுமன்றம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் 30,000 வீரர்களும், செங்கோட்டையில் சுமார் 9 ஆயிரம் வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
Rashtrapati Bhavan, Raisina Hill and Parliament lit up on the eve of 70th Independence Day. pic.twitter.com/bqEoTTTCBo— ANI (@ANI_news) August 14, 2016
மேலும் பாரா கிளைடிங் மற்றும் பலூன்கள் வரும் அக்டோபர் 10ம் தேதி வரை பறக்க டெல்லி போலீசார் தடை விதித்துள்ளனர்.

அடுத்த செய்தி