ஆப்நகரம்

தாஜ்மஹாலுக்கே போலி டிக்கெட் விற்ற சாஃப்ட்வேர் எஞ்சினியர் கைது!

தாஜ்மஹாலுக்கு போலி டிக்கெட் விற்ற மென்பொருள் பொறியாளர் கைது.

Samayam Tamil 22 Jan 2022, 8:23 pm
தாஜ்மஹாலுக்கு ஆன்லைனில் போலி டிக்கெட் விற்பனை செய்த சாஃப்ட்வேர் எஞ்சியினரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil Sandeep chand


உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் சந்தீப் சந்த். இவர் நொய்டாவில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு காலத்தில் தனது வேலை சரியாக போகாததால் போலி இணையதளம் உருவாக்கி அதில் தாஜ்மஹாலுக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளார்.

நூற்றுக்கணக்கானவர்களுக்கு தாஜ்மஹாலுக்கான போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த வழக்கில் சந்தீப் சந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!
மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காக தொடர்ந்து தான் இருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார் சந்தீப். கடைசியாக உத்தராகண்ட் மாநிலம் சம்பவத் பகுதியில் போலீஸாரிடம் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது வேலை சரியில்லாததால் போலி இணையதளம் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹாலுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்று ஈசியாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவர் இணையதளத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் சந்திடம் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அடுத்த செய்தி