ஆப்நகரம்

ஜே.என்.யூ.வில் தாக்குதல் நடத்தியது ஏ.பி.வி.பி.தான் - டெல்லி போலீஸ்

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினருமான கோமல் ஷர்மாதான் அந்த பெண் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இவரோடு இருந்த இரண்டு மாணவர்களான அக்‌ஷத் அவஸ்தி மற்றும் ரோஹித் ஷா ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 15 Jan 2020, 5:05 pm
ஜே.என்.யூ.வில் அண்மையில் நடந்த வன்முறை தொடர்பாக வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. இதில், செக் ஷர்ட் அணிந்து கையில் ஆயுதத்துடன் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாமல் இருந்த நிலையில், இந்து ரக்‌ஷா தளம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.
Samayam Tamil jnu


எனினும் இதுகுறித்த காவல்துறை விசாரணை நடந்து கொண்டிருந்தது. தாக்குதல் நடைபெற்ற போது வெளியிடப்பட்ட வீடியோவில், ஒருபெண், நீலநிற கைக்குட்டையை வைத்து தன்னுடைய முகத்தையும் மறைத்திருந்தார்.

ஏ.பி.வி.பி. தான் இந்த தாக்குதலைச் செய்தது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினருமான கோமல் ஷர்மாதான் அந்த பெண் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் இவரோடு இருந்த இரண்டு மாணவர்களான அக்‌ஷத் அவஸ்தி மற்றும் ரோஹித் ஷா ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது ஐபிசி பிரிவு 160-ன் கிழ் வழக்குப் பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.பி.வி.பி-யின் மாநில செயலாளர் சித்தார்த் யாதவிடம் கேட்டபோது, ``கோமல் ஷர்மா எங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்தான். சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படங்களைப் பகிர்ந்து ட்ரோலிங் செய்ய ஆரம்பத்ததிலிருந்து எங்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களுக்கு கடைசியாக கிடைத்த தகவலின்படி கோமல் தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கிறார். காவல்துறையினரிடமிருந்து சம்மன் பெற்றாரா என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி