ஆப்நகரம்

டெல்லி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம்

டெல்லியில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான பத்து காலியிடங்களை நிரப்ப நடக்கவிருந்த தேர்தல் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

TNN 23 May 2017, 12:37 pm
டெல்லியில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான பத்து காலியிடங்களை நிரப்ப நடக்கவிருந்த தேர்தல் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil delhi rajya sabha mp elections for ten seats canceled
டெல்லி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம்


டெல்லி மாநிலங்களவை எம்.பி.களான மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் நிர்வாகிகள் அகமது படேல், சாந்தாராம் நாயக் உள்பட 10 பேரின் பதவிக்காலம் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் முடிகிறது.

இதனை முன்னிட்டு, காலியாகும் 10 எம்.பி. பதவிகளை நிரப்ப ஜூன் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்குரிய வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்க இருந்தது.

இந்நிலையில், தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. உரிய நேரத்தில் மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு குறித்த சர்ச்சை ஆகிய காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி