ஆப்நகரம்

26 ஆண்டுகளில் இல்லாத ஷாக்; தாக்குப் பிடிக்குமா டெல்லி?

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, டெல்லி கடுங்குளிரில் சிக்கித் தவித்து வருகின்றது.

Samayam Tamil 29 Oct 2020, 10:46 pm
தலைநகர் டெல்லியில் வானிலை எப்படி இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 1994ஆம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு நடப்பாண்டின் அக்டோபர் மாதம் தான் மிகவும் குளிர்ச்சியாக காணப்படுகிறது. அதாவது அக்டோபர் 31, 1994 அன்று டெல்லியில் 12.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
Samayam Tamil Delhi


அதற்கும் முன்பு அக்டோபர் 31, 1937ல் வரலாறு காணாத அளவு 9.4 டிகிரி செல்சியஸ் என்ற மிகக் குறைவான வெப்பநிலையை பதிவு செய்திருந்தது. தற்போது 15 முதல் 16 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவிக் கொண்டிருக்கிறது.

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி 11 டிகிரியாக வெப்பநிலை மேலும் குறையக்கூடும். இதற்கு மேகக் கூட்டங்கள் இல்லாததே முக்கிய காரணம். மற்றொரு காரணம் எந்தவொரு சலனமும் இல்லாத காற்று தான்.

உள்நாட்டு விமானப் பயணம்: கட்டண வரம்பு நிர்ணயத்தில் இப்படியொரு சலுகை!

மேலும் விவசாய குப்பைகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசுபாடு PM 2.5 என்ற மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. சுமார் 36 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனை மத்திய அரசின் காற்று தர கண்காணிப்பு ஏஜென்சியான SAFAR உறுதிப்படுத்தி உள்ளது.

காற்றின் தரம் கடந்த புதன் அன்று 18 சதவீதமாகவும், செவ்வாய் அன்று 23 சதவீதமாகவும் காணப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு முதல் முறையாக டெல்லியின் காற்று தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி