ஆப்நகரம்

ஆணுறை இல்லையென்றால் அபராதம்.! இது என்னப்பா புது சட்டம்..

காரில் உள்ள முதலுதவி பெட்டியில் ஆணுறை வைத்திராத ஓட்டுநர்களிடம் டெல்லி போலீசார் அபராதம் வசூலித்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Sep 2019, 8:13 pm
புதிய மோட்டார் வாகனச்சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று வரை பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த சட்டத்தில் ஏராளமான குறைகள் இருந்தபோதும், போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்கான அபராதம் பல மடங்குகளில் உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுவது முக்கிய பிரச்சினையாக உள்ளது.
Samayam Tamil 8


டெல்லியில் போக்குவரத்து விதிகளைச் சரியாக வாகனங்களை ஒட்டி வந்தாலும், ஆணுறை இல்லாத பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதம் குறிப்பாக ஓலா மற்றும் யூபர் ஓட்டுநர்களிடம் வசூலிக்கப் படுகிறது. போக்குவரத்து தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமாக்க இந்த விதியை அறிவிக்கப்படாத நிலையில், போலீசார் அபராதம் வசூலிப்பது நியாயமற்றது என கார் ஓட்டுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.



ஏன் ஆணுறையை முதலுதவி பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றால், விபத்துகள் ஏற்படும் பொழுது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டாலோ அல்லது அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளியேறினாலோ அந்த இடத்தில் ஆணுறையைக் கொண்டு இறுக்கிக் கட்டினால் ரத்தம் விரயம் ஆவதை தடுக்க முடியும். இதனால் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்க்கப்படும் பொழுது அவரை எளிதில் காப்பாற்றிவிட முடியும்.


இந்த லாஜிக்காகத்தான் கார் ஓட்டுநர்கள் முதலுதவி பெட்டிற்குள் இரண்டு மூன்று ஆணுறைகளை வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நுட்பம் சில ஓட்டுநர்களுக்குத் தெரிந்துள்ளதால் ஆணுறையுடன் பயணிக்கிறார்கள். தெரியாதவர்கள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டு அபராதம் கட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஒரு சில போக்குவரத்து போலீசார் வாகனத்தை சோதனையிடும் போது ஆணுறையைப் பார்த்ததும் குழப்பம் அடைகிறார்கள் எனவும் ஓட்டுநர்கள் சிலர் கூறுகின்றனர். ஆக, இந்த விதி கட்டாயம் இல்லை என்றாலும் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில் ஆணுறையைக் குறித்து எந்த அபராதமும் வசூலிக்கப்பட்ட நிர்பந்திக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி