ஆப்நகரம்

டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு: ரயில், விமான சேவை முடக்கம்

கடந்த சில வாரங்களாக தொடரும் பனிப்பொழிவு காரணமாக, ரயில் மற்றும் விமான சேவை முடங்கியுள்ளது.

TNN 11 Jan 2017, 7:21 am
டெல்லி: கடந்த சில வாரங்களாக தொடரும் பனிப்பொழிவு காரணமாக, ரயில் மற்றும் விமான சேவை முடங்கியுள்ளது.
Samayam Tamil delhifog 26 trains arriving late 7 rescheduled and 11 cancelled due to fog
டெல்லியில் தொடரும் பனிப்பொழிவு: ரயில், விமான சேவை முடக்கம்


டெல்லி: தலைநகரில் தொடரும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அருகில் உள்ள பொருட்கள் கூட தெளிவாக தெரிவதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதையடுத்து சாலைகளில் செல்லும் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்கின்றன. இதன்காரணமாக காலை நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நிலவி வரும் மூடுபனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவை முடங்கியுள்ளது. டெல்லி மற்றும் நிஜாமுதீன் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 26 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ரயில்களின் பயண நேரம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு IRCTC இணையதளத்திலும், ரயில் நிலைய அறிவிப்பு பலகைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும்/வந்து சேரும் ஒரு சர்வதேச விமானம் கால தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் 5 உள்நாட்டு விமானங்களும் காலதாமதமாக இயக்கப்படுகிறது.

#DelhiFog: 26 trains arriving late, 7 rescheduled and 11 cancelled due to fog. 1 International and 5 domestic flights from/to Delhi delayed due to foggy weather.

அடுத்த செய்தி