ஆப்நகரம்

மோடி பதவி விலக வேண்டும்: கேரள முதியவரின் வித்தியாசமான போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகும் வரை பாதி முடிதான் வைத்துக்கொள்ளப்போவதாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

TNN 29 Nov 2016, 12:17 am
பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகும் வரை பாதி முடிதான் வைத்துக்கொள்ளப்போவதாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
Samayam Tamil demonetisation kerala old man shaves off half head demanding pm modi to resign
மோடி பதவி விலக வேண்டும்: கேரள முதியவரின் வித்தியாசமான போராட்டம்


கேரளாவில் துரித உணவகம் நடத்தும் 70 வயது முதியவர் யாஹியா. 500 மற்றும், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால் பாதிக்கப்பட்ட இவர் மோடி பதவி விலக வேண்டி நூதன போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு தன்னிடம் இருந்த 23 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார் யாஹியா. வங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் நீரிழிவு நோயாளியான அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பியது முதல் தன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். தன் தலைமுடியில் பாதியை எடுத்துவிட்ட அவர், பிரதமர் மோடி பதவி விலகும் வரை பாதி முடியுடன் தான் இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துள்ளார்.

இவரைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள கேரள பல்கலைக்கழக பேராசிரியர் அஷ்ரஃப் கடக்கால், யாஹியா தினமும் செய்தித்தாள் வாசிப்பவர் என்றும் தன் வேலைக்கு வசதியாக இருப்பதால் எப்போதும் நைட்டி அணிந்துதான் வேலை செய்வார் என்றும் குறிப்பிடிருக்கிறார்.

அடுத்த செய்தி