ஆப்நகரம்

ஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு; அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஹரியானா மாநிலம் கூர்கான் அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு இல்லாததால் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Feb 2018, 4:40 pm
ஹரியானா மாநிலம் கூர்கான் அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு இல்லாததால் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil denied entry into gurgaon hospital over aadhaar woman delivers baby outside
ஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு; அதிர்ச்சி ரிப்போர்ட்!


அரியானா மாநிலம் கூர்கானை சேர்ந்தவர் அருண் கேவாட். இவரது மனைவி முன்னி கேவாட்டுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனது மனைவியின் பிரசவத்திற்காக கூர்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருண் கேவாட் அழைத்துச் சென்றார். தனது மனைவியை உடனடியாக பேறுகாலப் பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்குமாறு மருத்துவரிடம் அருண் கேட்டுக்கொண்டார்.

ஆனால், ஆதார் அட்டை கையில் இல்லாத காரணத்தினால், உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், பிரசவ வார்டு அமைந்துள்ள வளாகத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது கூட உதவிக்காக எந்த மருத்துவரும் வராததால், அங்கு கூடியிருந்த நோயளிகள் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுகுறித்து அருண்கேவாட் கூறுகையில், கையில் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால், ஆதார் எண்ணை வழங்கினேன். அட்டையை பிறகு கொண்டு வருவதாக கூறினேன். ஆனால், அங்கிருந்த பெண் மருத்துவரும், நர்சும் அட்டை கொண்டு வந்தால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தலைமை மருத்துவர் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பாக டாக்டர் மற்றும் நர்சை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆதார் கார்டு இல்லாததால் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுக்கப்பட்ட சம்பவம் ஹரியான மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி