ஆப்நகரம்

சாம்சங்கை நோட்டை பயன்படுத்தாதீங்க!

சாம்சங் நோட் 7 செல்போனை விமானத்தில் கொண்டுசெல்ல மத்திய விமான போக்குவரத்துறை இயக்ககம் தடைவிதிஹ்துள்ளது.

TOI Contributor 9 Sep 2016, 8:13 pm
புதுடில்லி: சாம்சங் நோட் 7 செல்போனை விமானத்தில் கொண்டுசெல்ல மத்திய விமான போக்குவரத்துறை இயக்ககம் தடைவிதிஹ்துள்ளது.
Samayam Tamil dgca issues public notice on prohibition on use carriage of samsung galaxy note 7 mobile phone onboard
சாம்சங்கை நோட்டை பயன்படுத்தாதீங்க!


சாம்சங் நோட் 7 செல்போனில் உள்ள பேட்டரி பிரச்சனை காரணமாக எளிதாக தீப்பிடித்து விடுவதாக எழுந்த புகாரையடுத்து அந்த மாடல் போனை சாம்சங் நிறுவனம் திரும்பபெற்றுக்கொள்ள முன்வந்தது. இதையடுத்து அமெரிக்க போக்குவரத்துத்துறை தங்கள் விமானங்களில் செல்லும் பயணிகள், இந்த ரக போனை கொண்டு செல்ல உடனடியாக தடைவிதித்தது.

இந்த அறிவிப்புக்கு பின் சில மணி நேரங்களில் இந்திய விமானபோக்குவரத்துறையும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்குமேல் கொண்டு செல்ல வேண்டுமானால், விமான பயணத்தின் முழு நேரத்தின் போது நோட்-7 போனை மு ழுவதுமாக ஆப் செய்து கொண்டு செல்லவேண்டும் என கண்டிப்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி