ஆப்நகரம்

டாக்கா தாக்குதலில் இந்திய மாணவி பலி

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய மாணவி ஒருவரும் இறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார்.

Samayam Tamil 2 Jul 2016, 5:38 pm
டாக்கா: வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய மாணவி ஒருவரும் இறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார்.
Samayam Tamil dhaka victims include indian student
டாக்கா தாக்குதலில் இந்திய மாணவி பலி


டாக்காவில் உள்ள உணவு விடுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

I am extremely pained to share that the terrorists have killed Tarushi, an Indian girl who was taken hostage in the terror attack in Dhaka.— Sushma Swaraj (@SushmaSwaraj) July 2, 2016

வங்கதேசத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தருஷி என்ற இந்திய மாணவி இறந்திருப்பதாக அறிந்து மிகவும் வருத்தமடைவதாகவும் 19 வயதான அவர் டாக்காவில் உள்ள அமெரிக்கன் ஸ்கூலில் படித்து வந்தார் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தருஷியின் தந்தையைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி