ஆப்நகரம்

Babli Project: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலத்தில் தடையை மீறி நுழந்த வழக்கில், ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடுக்கு, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 14 Sep 2018, 11:23 am
மகாராஷ்டிர மாநிலத்தில் தடையை மீறி நுழந்த வழக்கில், ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடுக்கு, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Chandrababu-Naidu
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு!


மகாராஷ்டிரா மாநிலம் நான்ந்டெட் பகுதியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே, கடந்த 2010ஆம் ஆண்டு பாப்ஸி என்ற அணையைக் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால் இந்த அணைக் கட்டினால் ஆந்திர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் அணையை முற்றுகையிடப்போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில் தடையை மீறி மகாராஷ்டிராவில் நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், ஆஜராக சந்திரபாபு நாயுடுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஒருமுறைகூட அவர் ஆஜராகாததால், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மகனும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான லோகேஷ், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தெலுங்குதேசம் கட்சியினர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி