ஆப்நகரம்

மாயாவதியை அவதூறாக பேசியவருக்கு ஜாமின்..!

மாயாவதியை பாலியல் தொழிலாளியோடு ஒப்பிட்டு பேசியதற்காக கைது செய்யப்பட்ட முன்னாள் உத்தர பிரதேச பாஜக பிரமுகர் தயாசங்கர் சிங்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

TNN 6 Aug 2016, 6:53 pm
மாயாவதியை பாலியல் தொழிலாளியோடு ஒப்பிட்டு பேசியதற்காக கைது செய்யப்பட்ட முன்னாள் உத்தர பிரதேச பாஜக பிரமுகர் தயாசங்கர் சிங்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil dhaya shankar singh got bail
மாயாவதியை அவதூறாக பேசியவருக்கு ஜாமின்..!

மாயாவதியை அவதூறாக பேசியதற்காக தயாசங்கர் சிங்கின் மீது வழக்கு பதியப்பட்டதும் அவர் தலைமறைவானார்.11 நாட்கள் தேடுதலுக்கு பின் பீகார் மாநிலத்தில் உள்ள பக்சர் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.பின்னர் மா நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தயாசங்கர் சிங்கிற்கு ஜாமின் கேட்டு மனு செய்யப்பட்டது.ஆனால் நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.இதனையடுத்து மீண்டும் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி மற்றொரு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதனை இன்று விசாரித்த மா நகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி,50,000 ரூபாய் பிணைத்தொகையுடன் ,​ தயாசங்கர் சிங்கிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மாயாவதியை அவதூறாக பேசியதற்காக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் தயாசங்கர் சிங்கி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி