ஆப்நகரம்

இரவு நேரத்தில் வலம்வரும் விசித்திர உருவங்கள்-அச்சத்தில் மக்கள்.!

ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில், இரவு நேரங்களில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் உலா வருவதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை வெண்மை நிற இறகுகளுடன், மனித உருவங்கள் போல காட்சியளிப்பதாலும், இரவு நேரங்களில் பறப்பதாலும் ஆந்திர மக்கள் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.

TNN 9 Oct 2017, 4:23 pm

Samayam Tamil different shapes flying on the sky in andhrapradesh
இரவு நேரத்தில் வலம்வரும் விசித்திர உருவங்கள்-அச்சத்தில் மக்கள்.!

விசித்திரமான சம்பவம்.!
இந்த விசித்திரமான சம்பவம், கடந்த ஒருவாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நிகழ்வதாக சொல்லப்படுகிறது. நெல்லூர் மாவட்டத்தின் புறநகரில் உள்ள சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு நேரங்களில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இறக்கைகள் கொண்ட அதிசய உருவம் ;
இந்த விசித்திரமான உருவங்களுக்கு கைகளுக்கு பதில் 2 இறக்கைகள் வெண்மை நிறத்தில் காணப்படுவதாகவும், மனிதர்களுக்கு இருப்பது போல கால்கள் நீளமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உருவங்கள் பூமியை நோக்கி பறந்து வருவதாகவும் பின்னர் வானத்துக்கு சென்று விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பேயா.?தேவதையா.?குழம்பும் மக்கள்.!
சில உருவங்கள் வீட்டு கூரை மீது நின்றபடி பேசிக் கொள்வதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். அந்த உருவங்கள் கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டாலும் அது மனித உருவில் இருப்பதால் பேயாக இருக்கலாம் என்றும், தேவதைகளாக இருக்கலாம் என்றும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Different shapes flying on the sky in Andhrapradesh

அடுத்த செய்தி